2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருங்கடல் புகைப்படத்துக்கான முதல் இடம்


 


மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடலடி பவளப்பாறை பகுதியில் கண்ணாடி மீன்கள் புடை சூழ வலம் வந்த தோணி ஆமையின் படத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருங்கடல் புகைப்படத்துக்கான முதல் இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்தவர் எய்மீ ஜான் என்ற புகைப்பட கலைஞர்.

ஓஷியானிக் இதழ் நடத்திய இந்த போட்டி, பெருங்கடல்களின் அழகையும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் உலகம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.

கேனட் பறவை

பட மூலாதாரம்,HENLEY SPIERS / OCEAN PHOTOGRAPHY AWARDS

போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தது ஹென்லே ஸ்பியர்ஸ் எடுத்த படத்துக்கு கிடைத்தது. அவர், ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தீவு கடலில் கேனட் கடல் பறவையை தனது கேமராவில் பதிவு செய்திருந்தார்.

ஆமை

பட மூலாதாரம்,MATTY SMITH / OCEAN PHOTOGRAPHY AWARDS

மூன்றாவது இடம், குஞ்சு பொறித்த அழுங்காமை (Hawksbill) கடலை விட்டு வெளியே வர முதல் முறையாக நீந்தியபோது எடுத்ததற்காக கிடைத்துள்ளது. இதை எடுத்தவர் மேட்டி ஸ்மித்

கடல் சுறா

பட மூலாதாரம்,RENEE CAPOZZOLA / OCEAN PHOTOGRAPHY AWARDS

The Female Fifty Fathoms விருது - பெருங்கடல் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டும் பெண் கலைஞர்களை ஊக்கமளிக்கும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது லாஸ் ஏஞ்சலஸை சேர்ந்த உயிரியல் ஆசிரியர் ரெனீ காப்போஸோலாவுக்கு கிடைத்துள்ளது. இவர் பிரெஞ்சு பொலினீசியாவில் சூரிய அஸ்தமனத்தின்போது அலையுடன் சேர்ந்து பயணம் செய்த சுறா மீனை தமது கேமராவில் பதிவு செய்திருந்தார்.

தோணியாமை

பட மூலாதாரம்,HANNAH LE LEU / OCEAN PHOTOGRAPHY AWARDS

இளம் பெருங்கடல் புகைப்பட கலைஞருக்கான விருது ஹன்னா லி லியூவுக்கு கிடைத்தது. இவர் ஆஸ்திரேலியாவின் ஹெரோன் தீவில் இரைக்காக வானில் வட்டமடித்த கழுகுகளுக்கு கீழே கடலில் காற்றை சுவாசிக்க மேலெழும்பிய தோணியாமையை பதிவு செய்திருந்தார்.

இந்த படங்கள் லண்டனில் டவர் பிரிட்ஜ் அருகே தேம்ஸ் நதிக்கரையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி அக்டோபர் 17ஆம் தேதிவரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.