அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணராக வைத்தியர் எம்.என்.என்.எம். சஹீர்


 


வி.சுகிர்தகுமார் 0777113659  
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணராக வைத்தியர் எம்.என்.என்.எம். சஹீர்; நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமையினை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் முன்னிலையில் நேற்று கடமையினை பொறுப்பேற்றார்.
பல்வேறு  வைத்தியசாலைகளில் கடமையாற்றிய இவர் இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டார்.
 இதன் மூலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலம் மயக்க மருந்து நிபுணர் இல்லை எனும் குறைபாடு நிவர்த்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது