ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்புதற்போது இலங்கையில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுக்கும் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு தற்போது 
கொழும்பில் உள்ள ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
ஜிஎஸ்பி+ இன் மறுஆய்வு செயல்முறையின் செயல்பாட்டுகாக தூதுக்குழு இங்கு வந்துள்ளது

 நில அபகரிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடனான சந்திப்பில், கலந்துரையாடியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது