வழமை நிலைமையினை அடைந்துள்ளனFacebook, Whatsapp மற்றும் Instagram


 


Facebook, Whatsapp மற்றும் Instagram  உள்ளிட்ட செயலிகள் மீண்டும் வழமை நிலைமையினை அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த செயலிகள் சுமார் ஆறு மணிநேர செயலிழப்பிற்குப் பின்னர் மீண்டும் வழமை நிலையினை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான Facebook, Whatsapp மற்றும் Instagram உள்ளிட்ட செயலிகள் உலகளாவிய ரீதியில் நேற்று இரவு செயலிழந்தன.

இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 10 தசம் 6 மில்லியன் பயனாளிகள் பிரச்சினையை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த செயலிகளை அணுகுவதில் ஏற்பட்ட சிறமத்திற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்வாறானதொரு நிலைமை முன்னதாக 2019 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

இருப்பினும், குறித்த செயலிகள் செயலிழப்பின் காரணமாக பேஸ்புக் நிறுவனம் இது வரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.