அக்கரைப்பற்று மன்றினால் தங்க மாலையைத் திருடியவருக்கு 24 மாத கடூழிய சிறை




ST.Jamaldeen. 

திருக்கோவில், பிரதேசக் கோவில்களின்  உற்சவங்களில் தங்க மாலைககைள அபகரித்துச் சென்ற பெண்ணுக்கு 4 வழக்குகளில் தலா 6 மாங்கள் என்ற அடிப்படையில் 24 மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன்,  ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூபா 1500.00 தண்டப் பணம் அபராகம் விதிக்கப்ட்டதுடன் பாதிப்புற்ற பெண்ணுக்கு நட்டஈடாக ரூபா 10 000.00 செலுத்துமாறும் அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதவான் ஜனாப் எம்.எச்.எம்.ஹம்சா அவர்களினால் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.


குறித்த கொள்ளைச் கம்பவமானது, 2019ம் ஆண்டு  காலப்பகுதியில் இடம்பெற்றதாகும்.. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை திருக்கோவில் பொலிசாரால் அக்கரைப்பற்று நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்துதுடன் சாட்சியங்களும் நெறிப்படுத்தப்பட்டிருந்நது. 


சந்தேகத்திற்கிடமின்றி உரிய சாட்சியங்கள் கொண்டு 3 குற்றங்களில் இரண்டு குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு குற்றமானது  நிருபிக்கப்பட்டடதால், குறித்த குற்றவாளிக்கு ஏலவே வேறு  முன்குற்றங்கள் காணப்பட்டிருந்ததாலும் குறித்த குற்றவாளிகு்க எதிராகச் சுமத்தப்பட்ட 4 வழக்குகளின்  குற்றங்களுக்கும் தலா  6 மாதங்கள் என்ற அடிப்படையில் 24 மாங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அக்கரைப்பற்று நீதிமன்று இன்று தீரப்பளித்தது. 

முதலாவது தண்டனைத் தீர்பானது இன்று முதல் ஆரம்பமாகி ஆறு மாதங்கள் முவெடையும் தறுவாயில், அடுத்த தண்டனையானது அமுலாகும் என அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் தீரப்பளித்தது.