இன்று (01) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02) காலை 6.00 மணி வரை, மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SDIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (31) ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கொழும்பின் பல பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் இரவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment