மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடு செல்ல தடை.


 


மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடு செல்ல தடை. 


09.05.2022 ஆம் திகதி காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 14 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.