நிலாயமற்ற வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை



 


அத்தியாவசிய உணவுப் பொருட்களை போதுமான அளவு கையிருப்பில் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 


சந்தை, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்ணான்டோ உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 


மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பைப் பேணுவதன் மூலம் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் காட்டி விலையை அதிகரிக்கச் செய்யும் வியாபாரிகளின் திட்

டமிட்ட முயற்சிகளை இதன் ஊடாக முறியடிக்கக   முடியும்