பெண் பொலிஸ் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த முற்பட்ட,நிலைய பொறுப்பதிகாரி விளக்க மறியல்



 


பெண் பொலிஸ் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட செவனகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று (29) எம்பிலிபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதிவான் அவரை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் நிலைய பொறுப்பதிகாரி அத்துமீறலில் ஈடுபட்டதாக கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை கைது செய்ய முற்பட்ட வேளையில், அவர் நீதிமன்றில் முன்ஜாமீன் கோரியுள்ளார். எதிர்பார்த்த பிணை நிராகரிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் நேற்று (29ஆம் திகதி) எம்பிலிபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.