ஊடகவியலாளர் சங்கங்கங்களின் பிரதிநிதிகளுக்கான நான்கு நாள் வதிவிட பயிற்சி



 .(சுகிர்தகுமார்) 0777113659  




அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர் சங்கங்கங்களின் பிரதிநிதிகளுக்கான நான்கு நாள் வதிவிட பயிற்சி செயலமர்வு கொழும்பு மூவின்பிக் தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது.

ஜனநாயக இலங்கைக்காக ஊடகங்களை வலுப்படுத்தும் நிகழ்சித்திட்டன் கீழ் யுஎஸ்எயிட் ( ருளுயுஐனு) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்போடு ஜரிக்ஸ் (ஐசுநுஓ) என அழைக்கப்படும் சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிமாற்றச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பயிற்சி செயலமர்வில் அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்ந்த மூன்று சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜரிக்ஸ் நிறுவனத்தின் தலைவி ஜீன் மக்கன்சி தலைமையில் நேற்று முதல் ஆரம்பமான இப்பயிற்சி செயலமர்வில் பயிற்சியாளராக பிபிசி சர்வதேச செய்திப்பிரிவில் கடமையாற்றிய வின்டி பில்மிர் கலந்து கொண்டதுடன் ஜரிக்ஸ் நிறுவனத்தின் சிரேஸ்ட திட்டமிடல் உத்தியோகத்தர் சாமனி நாணயக்கார மற்றும் ஜரிக்ஸ் நிறுவனத்தின் திட்டமிடல் இணைப்பாளர் கவின் சதானந்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு பயிற்சி நெறியினை முன்னெடுத்துச் சென்றனர்.

 சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திச் சூழலில், மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள், வளங்கள் விநியோகம் அல்லது ஏனைய தீர்மானங்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல் மற்றும் அத்தகைய தீர்மானங்கள் செயற்படுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட காரணங்களை மையமாக வைத்து பரப்புரையினை உருவாக்கும் பயிற்சியாகவே இச்செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக மூன்று சங்கங்களுக்கும் தெரிவு செய்துள்ள வௌ;வேறு வகையான பிரச்சினைகளை பரப்புரையாக முன்வைத்து அதற்கான பங்குதாரர்கள் உள்ளிட்ட மூலவளங்களை திரட்டி திறன்பட செயலாற்றும் முறையூடாக வெற்றி காண்பது தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று கடந்த காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு காணப்படாதுபோன விடயங்களை மேலும் முன்கொண்டு செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  

பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு காணப்படாதுபோன விடயங்களை மேலும் முன்கொண்டு செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  


குறிப்பாக ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான தொடர்பு, ஊடகவியல் தொடர்பில் எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம், உள்ளிட்ட விடயங்களும் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.