(எம். என்.எம்.அப்ராஸ்)
கல்முனை பிரதேச செயலகத்தில் வினைத்திறன் மிக்க சேவையாற்றி அரச சேவையிலிருந்து சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஓய்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெளரவிப் பு நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நேற்று(11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர்,பிரதி திட்மிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும்,கிளைத்தலைவர்கள், சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள்,உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் ஓய்வு காலம் சிறப்புடன் அமைய வாழ்த்திப் பாராட்டினர். மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக நலநோம்பல் அமைப்பினர் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.


Post a Comment
Post a Comment