(விளையாட்டரங்கம்) தினம் தினம் சீரழிந்து வருகின்றது .
சுனாமிக்கு பின்னர் நிறுவனமொன்றால் அமைக்கப்பட்ட இந்த நவீன ரக பவிலியன் இன்று பாவிக்க முடியாதபடிஅபாயகரமாக மாறி உள்ளது.
மேலுள்ள தகரங்கள் எந்நேரமும் கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது. மழைக்கோ வெயிலுக்கோ நிற்க முடியாத ஒரு அவல நிலையும் நிலவுகிறது.
பெயருக்கு பெவிலியன் என்று ஓட்டை ஒடிசலாக இருக்கின்றது தவிர இதனால் எந்த பலனும் இல்லை .
அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் பேசப்பட்டது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக விரைந்து இந்த பெவிலியனை புனருத்தாரணம் செய்ய வேண்டும். இன்றேல் பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். என்று விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.


Post a Comment
Post a Comment