கொஹுவளை துப்பாக்கிச்சூடு – நால்வர் கைது



கொஹுவளை போதியவத்தை பகுதியில் இளம் பெண்ணை சுட்டுக் கொல்ல முயன்றது தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 



இந்தக் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர், துப்பாக்கிக்குப் பொறுப்பாக இருந்தவர், துப்பாக்கியைக் கடத்திச் சென்றவர் மற்றும் குற்றவாளிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் என நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 



சந்தேகநபர்களிடமிருந்து 3 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், 9 மி.மீ ரகத்தின் 10 தோட்டாக்களும், 50 கிராம் ஹெரோயினும், 55 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 



குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.