மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று (21) ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் முச்சக்கரவண்டி சாரதியும் பலத்த காயத்துக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் பொதுமக்களின் உதவியுடன் அருகிலுள்ள மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(மட்டக்களப்பு செய்தியாளர்)


Post a Comment
Post a Comment