ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாழைச்சேனை முஹம்மது அக்ரம் இன்று அதிகாலை பயணமானார்.
இலங்கை விமானப்படையில் இயந்திரவியலாளராக பணி புரிந்து வரும் வாழைச்சேனையைச்சேர்ந்த அப்துல் கபூர் முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இயந்திரவியலாளர்களில் ஒருவராக இணைந்து கொள்கின்றார்.
மத்திய ஆபிரிக்க குடியரசு செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த குற்றவியல் நிலைப்படுத்தல் பணியக (MINUSCA) சமாதானப்படையில் இலங்கை விமானப்படையின் 11வது (Aviation Unit) ஹெலிகாப்டர் பிரிவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும் ஐந்து பெண் வீராங்கணைகள் உட்பட 88 விமானப்படை வீரர்களும் இணைந்து கொள்கின்றனர்.
இக்குழுவில் இணைந்து கொள்ளும் முஹம்மது அக்ரம் தனது குழுவினருடன் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக மத்திய ஆபிரிக்க குடியரசு நோக்கிப் பயணமானார்.
வாழைச்சேனை மண்ணிலிருந்து ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் இரண்டாவது நபரான முஹம்மது அக்ரம், மென்மேலும் உயர் பதவிகளைப்பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
-முஹம்மது ஹலீம்


Post a Comment
Post a Comment