இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட கீழடுக்கு வளிமண்டல குழப்பமானது தற்போது தாழமுக்க பகுதியாக (Low Pressure Area) வலுவடைந்து உள்ளது.
இதன் காரணமாக நாட்டில் மழையுடனான காலநிலை முக்கியமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, மாகாணங்களில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய, வடக்கு மாகாணங்களில் மழை காணப்படுவதுடன்,
ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும்,
நுவரெலியா, மாத்தளை, பொலன்நறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் இற்க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும்
அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, மொணராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் சற்று பலமான காற்று வீச கூடும்.
இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)


Post a Comment
Post a Comment