கல்பிட்டியில் 882 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு



 


கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்


கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.


இதன்படி ஆனவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் முந்நூற்று ஆறு கிலோகிராம் பீடி இலைகளும், முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் ஐநூற்று எழுபத்தாறு கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்படடன.


கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளும் கெப் வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.