அக்கரைப்பற்று,ஆண்கள் வித்தியாலயத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம்



 


அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் (Government Muslim Boys Vidyalaya), 







நவீன வசதிகள் கொண்ட புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் (ICT Laboratory) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.


கொட்டும் மழைக்கு மத்தியில்,

நேற்றைய தினம் (2026 பெப்ரவரி 06) வெள்ளி காலை இந்தத் திறப்பு விழா இடம்பெற்றது.


இதன் பிரதான அனுசரணையாளரும் எமது பழைய மாணவருமான, Technocity (PVT) LTD நிறுவனத்தின் தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஃபெமி, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இறைவன் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்லருள் பாலிப்பானாக. 


நிகழ்வில் கொழும்பு மாவட்ட உலமா சபையின் பிரதித் தலைவரும், தெஹிவளை நூறுல் குர்ஆன் மத்ரஸாவின் அதிபருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஃபாயிஸ் ரஷாதி அவர்களும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.


செயல்முறைக் கற்றலுக்காக 21 உயர்தர பிராண்டட் கணினிகளும்,

நவீன தொழில்நுட்பத்துடன் பாடங்களைக் கற்பிக்க உதவும் 75 அங்குல ஊடாடும் திரையும் (Interactive Panel) இதில் உள்ளடங்கியுள்ளன. சுமார் 60 லட்சம் பெறுமதியான கருத்திட்டம் இது.



இங்கு டிஜிட்டல் கல்வியின் புதியதொரு அத்தியாயம் நேற்று ஆரம்பமானது மகிழ்ச்சி தருகிறது.


அதிபர் ஜனாப் I.L. சாஜித்

பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க (OBA) உறுப்பினர்கள்,

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) உறுப்பினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


இக் கருத்திட்டம் (Project) மிகச்சிறப்பாக நடைபெற முக்கிய பங்காற்றிய, எமது பழைய மாணவர் சங்கத்தின் (OBA) செயலாளர் Dr. M.M. கவ்தர் முஸ்தபா அவர்களுக்கு, எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் பொருளாளர் M.I.நாஸரும் இதற்கு உறுதுணையாக இருந்தார்.


அத்தோடு, பாடசாலை சமூகத்தின் பங்களிப்புக்கு எமது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.