T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள்நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது
இந்த தோல்வியை தொடர்ந்து அரை இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது

Post a Comment
Post a Comment