நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறைப் பகுதியில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலைக்கு இன்று (25.02.2026) விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் ஐ.எல். ஜலால்தீன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாய்வின் முக்கிய நோக்கம், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் நலன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை மதிப்பீடு செய்து உறுதிப்படுத்துவதாகும்.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் போது, ஊழியர்களுக்கான மருத்துவ வசதிகள், வேலைத்தள காற்றோட்டம், ஓய்வு நேரங்கள் மற்றும் ஓய்வெடுக்கும் இடங்கள், தொழிலிட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக பரிசோதிக்கப்பட்டன. மேலும், விபத்துகளைத் தவிர்க்கும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதும் ஆராயப்பட்டது.
தொழிலாளர் நலனும், பாதுகாப்பான பணிச்சூழலும் உறுதிப்படுத்தப்படுவது முக்கியம் என வலியுறுத்திய அதிகாரிகள், தேவையான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்த விஜயம் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழிலிட சுகாதார தரங்களை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR


Post a Comment
Post a Comment