அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பணமும் நாளை



 


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.


நலன்புரி நன்மைகள் சபை இதனை தெரிவித்துள்ளது.


அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. 


அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பணமும் நாளை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.