மாலபேயில் மோட்டார் சைக்கிள் சாகசம் - பலர் கைது



 


மாலபே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்திய 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்கள் பயணித்த டோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீதியில் பயணிப்போருக்கு இடையூறு ஏற்படும் வகையில் இளைஞர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக, கடுவெல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து, பொலிஸார் அங்கு சென்று அப்பகுதியை முற்றுகையிட்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.


வட்ஸ்அப் குழுக்கள் ஊடாக ஒன்றிணைந்த இந்த இளைஞர்கள், குறித்த இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு பயம் ஏற்படும் வகையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.


கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இரண்டுக்கு பதிவு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.