டெங்கு காய்ச்சலால் பறிபோன பல்கலைக்கழக மாணவியின் உயிர்



 


டெங்கு காய்ச்சலால் பறிபோன பல்கலைக்கழக மாணவியின் உயிர்..😥😥


டெங்கு காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் #உ*யி*ரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையின் ருஹுணு பல்கலைக்கழகத்தைச் (Ruhuna University) சேர்ந்த 23 வயதுடைய மாணவி சந்தாலி தாரிகா என்ற மாணவியை டெங்கு காய்ச்சல் காரணமாக #உ*யி*ரிழந்துள்ளார்.


அவரது திடீர் #ம*ரணம், ரூஹுனு பல்கலைக்கழகத்தின் கலைப் பீட மாணவர் சங்கம் மற்றும் பொது மாணவர் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தையும் #பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், அவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.😥😥


#உ*யிரிழந்த மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பிய இறுதி வாட்ஸ்அப் செய்தியில்....


''தான் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், "நான் இ*றக்காவிட்டால் கண்டிப்பாக உங்களைப் பார்க்க வருவேன் நண்பர்களே" என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.😥😥


மாணவியின் துரதிர்ஷ்டவசமான #ம*ரணம், நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு பெருந்தொற்றின் பயங்கரமான தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.


⚠️1. பொதுமக்களே... காய்ச்சலை அலட்சியப்படுத்தாதீர்கள் (Early Medical Care):...👇👇


🛑"சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும்" என்று நினைத்துக்கொண்டு, மருந்தகங்களில் (Pharmacy) தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.


🛑காய்ச்சல் ஏற்பட்ட முதல் 24 - 48 மணித்தியாலங்களுக்குள் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி, இரத்தப் #பரிசோதனை (FBC Test) செய்துகொள்வது டெங்குத் #தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற உதவும்.


🛑வாரத்திற்கு ஒருமுறை உங்களது வீடு, பாடசாலை, அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக சூழலைச் சோதனையிட்டு சிரட்டை, டயர்கள், தயிர் சட்டிகள், வெற்றுப் போத்தல்கள் மற்றும் நீர் தேங்கும் அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்துங்கள்.


🛑#கடுமையான காய்ச்சலுடன் தசைவலி, மூட்டுவலி, கண் இமைகளுக்குப் பின்னால் வலி, வாந்தி அல்லது உடம்பில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.


''எமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்போம்!"


#DengueOutbreak #RuhunaUniversity #DengueDeath #SriLankaHealth #MonsoonDisease #FeverCare #EpidemiologyUnit #HealthAlert #VanniNews #SriLanka #டெங்குகாய்ச்சல் #ருஹுணுபல்கலைக்கழகம் #மாணவிமரணம் #பருவமழைஆபத்து #சுகாதாரவிழிப்புணர்வு #உயிர்பாதுகாப்பு #டெங்குஎச்சரிக்கை #வன்னி