( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் கல்முனை நெற் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இளம் மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், கனடா உதவும் பொற்கரங்கள் அமைப்பு , கட்டார் பீனிக்ஸ் விளையாட்டு கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கவிதை மற்றும் சிறுகதை எழுத்துப் பயிற்சி பட்டறையும் செயலமர்வும் நேற்று 20.06.2026 (சனிக்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற
இச்செயலமர்வை, கல்முனை நெற் இயக்குனர் சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருமான பி.கோகுலராஜன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இலக்கியத் துறையில் அனுபவமிக்க வளவாளர்களான ஓய்வு நிலை அதிபர் அக்கரைப்பாக்கியன், ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே.டேவிட், ஓய்வுநிலை மாகாண கலாச்சார பணிப்பாளர் ச.நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டு, கவிதை மற்றும் சிறுகதை எழுத்தின் நுட்பங்கள், படைப்பாற்றல் வளர்ப்பு மற்றும் எழுத்து நடை தொடர்பாக எடுத்து கூறினர்.
இறுதியாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை நெற் ஊடக மைய ஆலோசகர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் வித்தகர் கலாபூஷணம் சு.அரசரெத்தினமும் கலந்து சிறப்பித்தார்.
கல்முனை நெற் ஊடகத்தின் கடந்த பத்து வருடகால பயணம் அதன் ஓரங்கமான எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் போன்றவற்றின் வளர்ச்சி செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்ட அவர் அவற்றின் ஸ்தாபகரான புவி.கேதீஸின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் பற்றியும் விபரித்தார்.
நிகழ்வில், கல்முனை நெற் மற்றும் எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் கா. சந்திரலிங்கம், கா. சாந்தகுமார், என். அருளானந்தம், என். சௌவியதாசன்,
பி .சந்திரமோகன்,
எஸ்.ரகுவரன், ஜெனிதா மோகன் மற்றும் எழுத்தாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெறுமதியான பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
அங்கு உடனடியாக கவிதை எழுதியோரில் சிறந்த கவிதை எழுதிய மூவருக்கு பணப் பரிசும் வழங்கப்பட்டது.


Post a Comment
Post a Comment