முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில்



 


நடந்தது என்ன 

முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்..

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

இப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 17.03.2025 அன்று ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் 23.05.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 13.09.2023 முதல் 20.09.2023 வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், 22 மற்றும் 23.09.2023 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

நீண்ட விசாரணைகளின் போது அரசாங்க தரப்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக ரணிலுக்கான பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட #தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக, அரசாங்கத்தின் 166  லட்சம்  ரூபாய் நிதியை #முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி  Ranil Wickremesinghe வை, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் திகதி வரை #விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்கபுர இன்று உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிப்பது அல்லது தடுத்து வைப்பது தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக மூத்த அரச வழக்கறிஞர் திலீப பீரிஸ் ஆஜரானார், அதே நேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தினார் ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜ பிரேமரத்ன.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது - இலங்கை வரலாற்றில் முதன்முறை; என்ன காரணம்?


இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பில் உள்ளகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகியிருந்தார்.


ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.


தனது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு , அரச நிதியை பயன்படுத்தி விஜயம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.


இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்திருந்தது.


இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்துக்கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 09 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


முதல் சந்தர்ப்பம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முன்னான் ஜனாதிபதி ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கையில் 1978ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமே தற்போது நாட்டில் அமலில் உள்ளது.


இந்த அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு அதிவுயர் அதிகாரமான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.


ரணில் விக்ரமசிங்கவிற்கு பின்னர் தற்போது அநுர குமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.


இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.


சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாபட மூலாதாரம்,PRADEEPA MAHANAMAHEWA

படக்குறிப்பு,சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய முடியுமா?

முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் அதிகாரம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பிபிசி தமிழ், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம் வினவியது.


''ஜனாதிபதி ஒருவருக்கு விசேட சிறப்புரிமை உள்ளது என 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது சரத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புரிமையின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை பதிவு செய்ய முடியாது என 35/1 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.


எனினும், அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, அவரது பதவிக் காலத்திற்குள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில், அவருக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாத பட்சத்திலும் அவருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியும் என அவர் விளக்குகிறார்.


''ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்திற்குள் மாத்திரமே சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்ய முடியாது. அவரது பதவியிலிருந்து அவர் விலகியதன் பின்னர் அல்லது ராஜினாமா செய்த பின்னர் அவர் பதவிக் காலத்தில் விடுத்த சிவில் அல்லது குற்றவியல் தவறுகளுக்கு வேறொரு தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதில் எந்தவித தடங்கல்களும் இல்லை. நீதிமன்றத்தில் பீ (B) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கோட்டை நீதவானின் அனுமதியுடனேயே முன்னாள் ஜனாதிபதியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது." என அவர் தெரிவித்தார்.


அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெரியவரும் பட்சத்தில், போலீஸாரினால் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் பிணை அவருக்கு வழங்க போலீஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.


"அதனாலேயே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார். 1999ம் பிணை சட்டத்திற்கு அமைய அவருக்கு பிணை கோரிக்கை முன்வைக்கப்படும்.'' எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.