வரிப்பத்தான்சேனை பெரியபாலம் ஒளியூட்டல் – நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு
நூருல் ஹுதா உமர்
வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும் பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சின் “நகரங்களை அழகுபடுத்தல்” திட்டத்தின் கீழ் இந்த ஒளியூட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபை தலைவர் கௌரவ எம்.எல்.எம். முஸ்மி அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் உதவி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான என்.எம். ஆஷீக் மற்றும் உறுப்பினர் ஏ.ஜி.எம். சாக்கீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவி செய்த உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், பகுதியின் அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு விசேடமாக 5 மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர் என பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தெரிவித்தார். விசேடமாக மருத்துவதுறையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெறமுடிந்துள்ளதுடன் வர்த்தக பிரிவிலும் மாவட்ட மட்டத்தில் 3,ஆம் 8ஆம் நிலையினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் மாகாணத்தில் 3 ஆம் இடத்தையும் மாவட்ட அடிப்படையில் 1 ஆம் இடத்தையும் முன்னோக்கி நகர முடிந்துள்ளதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டார். அத்தோடு தமது பாடசாலையும் 75 வீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தை பெற்று 73 இற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற்று வலயத்தின் இத்தகைய முன்னேற்றத்துக்கு ஏனைய பாடசாலைகளைப்போல் கணிசமான பங்களிப்பு செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என சுட்டிக்காட்டினார். இத்தகைய சாதனை தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்டதல்ல. குழு ரீதியான அர்ப்பணிப்பணிப்பின் மூலமே சாதிக்க முடிந்துள்ளது. இதற்காக திட்டமிட்டு உழைத்த வலயக் கல்வி பணிப்பாளர்,பிரதிக் கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக் கல்வி பணிப்பாளர்கள்,உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள்,அனுசரணையாளர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு பழைய மாணவர் சங்கம் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாடசாலை சார்பில் தெரிவித்துகொள்வதாகவும்; குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தேசிய கல்விக் கல்லூரிகளின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் இடம்பெறாதது தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சங்க ஆலோசகரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முகம்மட் முக்தார் கருத்துத் தெரிவிக்கையில், கல்வி அமைச்சு முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய கல்விக் கல்லூரிகளின் தற்போதைய கட்டமைப்புகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக இந்நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, இக்குழுவில் மூன்று சிங்கள பேராசிரியர்கள், ஒரு தமிழ் பேராசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் கல்விச் சேவையாளர் இடம்பெற்றுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனக் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள தமிழ் மாணவர்களை கருத்தில் கொண்டு தமிழ் பேராசிரியர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அட்டாளைச்சேனை மற்றும் தர்காடவுண் போன்ற பகுதிகளில் அதிகளவு முஸ்லிம் மாணவர்கள் பயிலும் தேசிய கல்விக் கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் சேர்க்கப்படாதது கல்வி அமைச்சின் தவறாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதற்கு முன்னர் கல்விச் சபை அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை குறித்து பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் தான் ஒருவர் நியமிக்கப்பட்ட சம்பவத்தையும் நினைவூட்டிய அவர், இவ்வாறான விடயங்கள் முஸ்லிம் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான புறக்கணிப்பு காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாகவும், இதற்கான பின்னணியில் சில தரப்புகள் செயல்படுகின்றனவா என்பதையும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி சமநிலையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன
'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கில் அழிவை ஏற்படுத்தவும், மிகவும் சிக்கலான வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவவும் இரான் நாட்டின் குறைந்த செலவிலான 'காமிகாஸி ஷாஹெத்' டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த டிரோன்கள் நவீன போர் முறை மற்றும் அதன் பொருளாதார சமன்பாடுகளில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளன.
இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் சேர்த்து, இந்த ஷாஹெத் டிரோன்களைப் பயன்படுத்தி மத்திய கிழக்கு முழுவதும் உள்ள சென்சார்கள், ராடார்கள், ராணுவத் தளங்கள், எண்ணெய்-எரிவாயு உள்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் குழப்பம், நவீன போர்க்களத்தில் டிரோன்கள் மற்றும் வான் சக்தியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 2022-இல் ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து இந்த ராணுவக் கோட்பாடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது.
ஷாஹெத் டிரோன்களால் ஏற்பட்ட பெரும் சேதம், மலிவான காமிகாஸி டிரோன்களைப் பெரிய அளவில் ராணுவ ஆயுதக் கிடங்குகளில் சேர்ப்பதன் உத்தி ரீதியான நன்மை எவ்வளவு பெரியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியாவிற்கு இந்தப் பாடம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்தியா தற்போதைய மோதல் பகுதியிலிருந்து சில ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும், அதன் எல்லைகள் 'எதிரிகளால்' சூழப்பட்டுள்ளன.
தாட் (THAAD) அமைப்பு அல்லது PAC-3 மூலம் செய்யப்படும் ஒவ்வொரு இடைமறிப்பும் 1 மில்லியன் டாலர் முதல் 4மில்லியன் டாலர் வரை செலவாகிறது.பட மூலாதாரம்,Lockheed Martin
படக்குறிப்பு,தாட் (THAAD) அமைப்பு அல்லது PAC-3 மூலம் செய்யப்படும் ஒவ்வொரு இடைமறிப்பும் 1 மில்லியன் டாலர் முதல் 4மில்லியன் டாலர் வரை செலவாகிறது.
சமமற்ற பொருளாதாரக் கணக்கீடு
பிப்ரவரி 28 அன்று மோதல்கள் தொடங்கியதிலிருந்து, இரான் டிரோன் கூட்டங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக ஷாஹெத்-136, ஷாஹெத்-107 மற்றும் ஷாஹெத்-238 டிரோன்கள் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி. பஞ்சாப்புக்கு எதிராக தோற்றதற்கான 4 காரணங்கள் எவை?
'2வது போட்டியிலே இப்படியா?' - சிஎஸ்கே தோல்விக்கான 4 காரணங்கள் என்ன?
இரான், அமெரிக்கா, டிரம்ப், அமெரிக்கப் போர் விமானம்
இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான் - என்ன நடக்கிறது?
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
F-15 போர் விமானம் புறப்படுகிறது (சித்தரிப்புப்படம்)
'இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்' - இதுவரை தெரிந்தது என்ன?
ஷாஹெத் 136 மற்றும் ஷாஹெத் 107 ஆகியவை பிஸ்டன் இன்ஜின் மூலம் இயங்கும், ஒருமுறை மட்டுமே தாக்கும் 'லாயிட்டரிங் மியூனிஷன்' (இலக்கு இருக்கும் பகுதியில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஆயுதங்கள்) ரகத்தைச் சேர்ந்தவை.
அதேசமயம், ஷாஹெத் 238 என்பது ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் லாயிட்டரிங் மியூனிஷன் ஆகும்.
இரான் நாட்டு டிரோன்களின் மிகப் பெரிய பலமே, அவை விலை குறைவானவை மற்றும் மிக எளிதாகத் தயாரிக்கக்கூடியவை என்பதுதான். போரில் பயன்படுத்தப்படும் இந்த ஷாஹெத் டிரோன்களின் விலை ஒரு டிரோனுக்குத் தோராயமாக 20,000 முதல் 50,000 டாலர் வரை மட்டுமே ஆகிறது.
இதற்கு நேர்மாறாக, இவற்றைத் தடுப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் மிக மிக விலை உயர்ந்தவை. அமெரிக்காவின் 'தாட்' (THAAD) அல்லது 'பேட்ரியாட்' ஏவுகணை அமைப்பு (PAC-3) மூலம் ஒரு தாக்குதல் ஏவுகணையையோ அல்லது டிரோனையோ நடுவழியில் சுட்டு வீழ்த்த 1மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செலவு வேறுபாடு ஒருபுறமிருக்க, மற்றுமொரு சிக்கலும் உள்ளது. எதிரியின் தாக்குதலை தடுக்கும் ஏவுகணைகள் வேகமாகத் தீர்ந்துவிடுவதுடன், அவற்றை மீண்டும் தயாரித்து நிலைநிறுத்த நீண்ட காலம் எடுக்கும்.
விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்களால், போரில் ஏவப்பட்ட 'டொமாஹாக்' ஏவுகணைகளை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலின் ஆரம்ப நாட்களில், இரான் நாட்டு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 800-க்கும் மேற்பட்ட தடுப்பு ஏவுகணைகளைச் செலவழித்தன.
ஆனால், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2025-ஆம் ஆண்டு முழுவதும் வெறும் 620 PAC-3 ஏவுகணைகளை மட்டுமே தயாரித்திருந்தது.
உண்மையில், இரான் அனுப்பும் டிரோன் கூட்டங்களின் விலையை விட, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவற்றைத் தடுக்கப் பயன்படுத்தும் அமைப்புகளின் விலை பலமடங்கு அதிகம்.
விநியோகச் சங்கிலியில் உள்ள கட்டமைப்பு ரீதியான வரம்புகள் மற்றும் சேதமடைந்தவற்றை மீண்டும் ஈடு செய்வதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றால் இந்தச் செலவு சமநிலையின்மை இன்னும் தீவிரமடைந்துள்ளது.
இது இந்த மோதலில் ஒரு பாதகமான பொருளாதாரச் சூழலை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், தன்னை எதிர்க்கும் நாடுகளின் ஒன்றுபட்ட கூட்டணிக்கு எதிராகத் தனது ஒப்பீட்டளவிலான ராணுவப் பலவீனத்தை ஈடுகட்ட இரான் நாட்டுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இரான் நாட்டின் ட்ரோன்கள் அவற்றை எதிர்கொள்ளும் தடுப்பு ஏவுகணைகளை விட மிகக் குறைந்த விலையிலானவை; மேலும் அவற்றை எளிதாகத் தயாரிப்பதோடு மீண்டும் போர்க்களத்தில் பயன்படுத்துவதும் மிக எளிது.பட மூலாதாரம்,Gailan Haji / Middle East Images / AFP via Getty Images
போரின் மாறியுள்ள இந்த பொருளாதாரச் சமன்பாடுகள், இரான் தனக்குச் சாதகமான உத்திகளைக் கையாளுவதற்கு உதவியுள்ளன.
இரான் நாட்டு டிரோன்கள், அவற்றைத் தடுத்து அழிக்கும் 'இன்டர்செப்டர்' ஏவுகணைகளை விட மிகக் குறைந்த விலையிலானவை.
அதோடு அவற்றை உருவாக்குவதும், மீண்டும் போர்க்களத்தில் நிலைநிறுத்துவதும் மிக எளிது.
இதன் காரணமாக, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் அந்தத் தடுப்பு ஏவுகணைகளை ஏவும் முடிவை எடுப்பதிலும், அதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தச் செலவு சார்ந்த பொருளாதார நெருக்கடி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், சில வளைகுடா நாடுகள் தங்கள் வசம் உள்ள தடுப்பு ஏவுகணைகளின் இருப்பைப் பாதுகாப்பதற்காக மாற்று உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஷாஹெத் டிரோன்களைச் சுட்டு வீழ்த்துவதற்காக வளைகுடா நாடுகள் 'எஃப் 16' போர் விமானங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், இந்த முறையும் கூட அதிகச் செலவு பிடிக்கக்கூடியதுதான். ஒரு F-16 விமானத்தை ஒரு மணிநேரம் விண்ணில் பறக்க விடுவதற்கான செலவு சுமார் 25,000 டாலர் ஆகிறது. இது போரின் மாறியுள்ள பொருளாதாரச் சித்திரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.
இதனால் புதிய ஆயுதங்களையும், தடுப்பு ஏவுகணைகளையும் வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகளின் தொழில் துறைத் திறனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
போரின் இந்த மாறிய பொருளாதாரச் சமன்பாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் அதிக நிதி பலம் கொண்ட ராணுவங்களுக்குக் கூட, குறைந்த செலவிலான ஆயுத அமைப்புகளைக் கொண்ட ஒரு சாமர்த்தியமான மற்றும் திறமையான எதிரி சவால் விடுக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
உளவுத் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை போரின் தொழில்நுட்பக் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிட்டன.
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய விருப்பத்தேர்வுகள் ராணுவங்களின் திறனைச் சந்தேகத்திற்கு இடமின்றி பல மடங்கு அதிகரிக்கின்றன என்றாலும், எதிர்கால மோதல்களுக்கு இந்த ராணுவங்களுக்குக் குறைந்த செலவிலான தாக்குதல் மற்றும் பாதுகாப்பு விருப்பத்தேர்வுகளும் தேவைப்படும்.
குறைந்த மூலதனம் மற்றும் சாதாரண தொழில்நுட்பம் கொண்ட ராணுவங்களே வெற்றி பெறும் என்பது இதன் பொருளல்ல; ஆனால் இது போர்க்களத்தை நிச்சயமாக இன்னும் சிக்கலானதாக மாற்றுகிறது. இந்தச் சமத்துவமின்மையின் தாக்கம் மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலோடு மட்டும் நின்றுவிடாது, வருங்காலத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஜனவரி 25 அன்று ஜம்மு-காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது; தற்போது தெற்காசிய மோதல்களில் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.பட மூலாதாரம்,Nasir Kachroo/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,ஜனவரி 25 அன்று ஜம்மு-காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது
இந்தியாவுக்கான பாடம்
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரிலிருந்து இந்தியா தள்ளி இருந்தாலும், அதன் பொருளாதார மற்றும் எரிசக்தி அதிர்வுகளிலிருந்து முற்றிலும் தப்பிவிட முடியாது. இந்தப் போர் இந்தியாவிற்குப் பல முக்கியமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட வான்வழி மோதலில் தெளிவாகத் தெரிந்தது போல, டிரோன் கூட்டங்கள் இப்போது தெற்காசிய மோதல்களிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன.
மியான்மரில் கூட அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே டிரோன் போர் நடப்பதைக் காண முடிகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலிலிருந்து வெளிப்பட்டு வரும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றமும், சமச்சீரற்ற டிரோன் உத்திகளும் துணைக்கண்டத்தில் டிரோன் போரை இன்னும் சிக்கலாக்கும்.
இந்திய ராணுவத்தின் டிரோன் ஆயுதக் கிடங்கில் பல 'ஹை-டெக்' டிரோன்கள் உள்ளன. இதில் இஸ்ரேலின் உளவு டிரோன்களான 'ஐஏஐ சர்ச்சர்' மற்றும் 'ஹார்ப்பர்' ஆகியவை அடங்கும். இது தவிர இஸ்ரேலில் இருந்தே வந்த 'லாயிட்டரிங் மியூனிஷன்' ரகங்களான 'ஹாரோப்' மற்றும் 'ஹார்ப்பி' ஆகியவையும் உள்ளன; இவை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன.
'ஹார்ப்பி'யின் ஒரு வகையான 'ஸ்கை ஸ்ட்ரைக்கர்', இந்தியாவில் கூட்டுத் தயாரிப்பின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கத் தயாரிப்பான 'எம் கியூ-9 ரீப்பர்' டிரோன்களும் காலப்போக்கில் இந்தியக் கையிருப்பில் சேர்க்கப்படும். 'நாகஸ்த்ரா 1' போன்ற உள்நாட்டு காமிகாஸி டிரோன்களும் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன.
இருப்பினும், இந்திய ராணுவ ஆயுத கையிருப்பில் உள்ள ஒரு பெரிய மற்றும் தெளிவான குறைபாடு என்னவென்றால், மலிவான மற்றும் எளிதாகத் தயாரிக்கக்கூடிய காமிகாஸி டிரோன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றன.
இந்தியா காமிகாஸி டிரோன்களைத் தயாரிப்பதற்கும் வாங்குவதற்குமான திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வேண்டியது அவசியம். 'நாகஸ்த்ரா' போன்ற உள்நாட்டுத் தீர்வுகளும், சமீபத்திய திட்டங்களான 'கால்' மற்றும் 'சேஷ்நாக்' போன்ற டிரோன்களும் இருந்தாலும், சிறிய அளவிலும் துண்டு துண்டாகவும் செய்யப்படும் கொள்முதல்கள் இவற்றை பெரிய அளவில் பயன்படுத்த ஏற்றதாக மாற்றாது.
ராணுவம் குறைந்த விலை காமிகாஸி டிரோன்களை பத்தாயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கிலாவது ஆர்டர் செய்ய வேண்டியது அவசியமாகும். குறைந்த எண்ணிக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு அவை கிடைப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்கும் தற்போதைய முறை, நீண்ட காலத்திற்குப் பலன் தராது; குறிப்பாகத் தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாக இது உதவாது.
இரான் நாட்டின் ட்ரோன்களின் மிகப்பெரிய பலமே அவை மிக மலிவானவை மற்றும் எளிதில் தயாரிக்கப்படக் கூடியவை என்பதுதான்.பட மூலாதாரம்,Imad Basiri/Anadolu via Getty Images
படக்குறிப்பு,இரான் நாட்டின் டிரோன்களின் மிகப்பெரிய பலமே அவை மிக மலிவானவை மற்றும் எளிதில் தயாரிக்கப்படக் கூடியவை என்பதுதான்.
போர்களில் குறைந்த விலை 'லாயிட்டரிங் மியூனிஷன்' பயன்பாடு இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கவே செய்யும்; இதற்கு இரானின் உத்திகள் மேலும் வேகத்தைக் கொடுத்துள்ளன. அமெரிக்கா கூட தற்போதைய மோதலில் இரானின் சமச்சீரற்ற உத்திகளை எதிர்கொள்ள 'குறைந்த விலை ஆளில்லா போர் தாக்குதல் அமைப்பை' (LUCAS) களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான ராணுவத் தளவாட உற்பத்தி கட்டமைப்பைக் கவனிக்கும்போது, இந்தியாவின் மீது இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது.
மேற்கு ஆசியாவிலிருந்து கிடைக்கும் மற்றொரு முக்கியமான பாடம் என்னவென்றால், மலிவான மற்றும் செலவு குறைந்த 'கவுன்டர் டிரோன்' அமைப்புகளைப் பெரிய அளவில் உருவாக்கவும், தயாரிக்கவும், வாங்கவும் வேண்டிய தேவை உள்ளது – யுக்ரேன் - ரஷ்யா போரின் போது இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டது போலவே இதுவும் அமைய வேண்டும்.
வளைகுடா நாடுகளிடம் இத்தகைய அமைப்புகள் இல்லாததன் எதிர்மறையான தாக்கம் தற்போதைய போரில் காணப்படுகிறது. இந்த குறைந்த விலை அல்லது மலிவான அமைப்புகள், தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேலாக ஒரு கூடுதல் பாதுகாப்பாகச் செயல்படும்.
இதன் மூலம் விலை உயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்த உறுதி செய்ய முடியும் மற்றும் எதிரியின் குறைந்த விலை காமிகாஸி டிரோன்களை எதிர்கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும்.
இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்தியாவில் நிறுவன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மன உறுதி தேவைப்படும்.
ராணுவம் எவ்வளவு விரைவாகவும் திறமையாகவும் பெரிய அளவிலான கொள்முதல் செயல்முறையைச் செய்கிறது என்பதில் இது தங்கியுள்ளது. ஆனால் உண்மையான சிக்கலே இங்குதான் உள்ளது - ஏனென்றால் முழுச் சமன்பாடும் கொள்முதல் செயல்முறையைத் தான் நம்பியுள்ளது, மேலும் இந்தச் செயல்முறை ஒவ்வொரு நிலையிலும் சிக்கல்களை கொண்டது.
கந்தளாய் ஜெயந்திகம பகுதியில் மினி சூறாவளி 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.
திடீரென ஏற்பட்ட இந்த சூறாவளித் தாக்கத்தினால் ஜெயந்திகம பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் தமது தங்குமிடங்களை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அனர்த்த மேலாண்மை பிரிவினருக்கு வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
நாவிதன்வெளி அன்னமலை 2 கிராமத்திலிருந்து அன்பழகன் பிரஜித் உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று (3A) அம்பாறை மாவட்ட ரீதியாக 27வது இடத்தை பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஜீப்,
ஆசிரியர் கே. கண்ணதாசன்
நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன், யாழ்பல்கலைக்கழக மாணவன் எஸ். பிதுர்சன் ஆகியோர் கலந்துகொண்டு சாதனை மாணவனை பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
நாவிதன்வெளியை சேர்ந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் கற்றவராவார்.
நாவிதன்வெளியின் இரண்டாவது மருத்துவ மாணவராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை நகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ மாபெரும் மாநகர அழகு ரதபவனி கடந்த (01) புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத் தலைவர் வே.செவ்வேட்குமரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அலங்கார சித்திரத் தேர்களை பெண்கள் வடம்பிடித்து ஆறு மணி நேரமாக இழுத்து வந்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பட்டாசுகள் முழங்க ரதங்கள் பவனி வந்தமை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. முழு மாநகரமே
அதிர்ந்து.
கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து சந்திரசேகரன் ராஜன் தலைமையில் பக்தர்களுக்கு இளநீர் வழங்கினர். பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதேபோன்று பல அமைப்புகள் இடையிடையே நீராகாரம் வழங்கினர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டமை தொடர்பில் கடும் அதிருப்தி மற்றும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், குறித்த நிகழ்வில் கட்சித் தலைவர் பங்கேற்றமை தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதியாக, தமது ஆதரவாளர்களும் பொதுமக்களும் இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் அனைத்து இன, மத மக்களும் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய பின்னணியில், அரசியல் உள்நோக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கட்சித் தலைவர் பங்கேற்றதை தாம் ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது என இம்ரான் மகரூப் எம்.பி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சின் உதவியினால், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நவீன ஸ்மார்ட் போர்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தேவையுடைய பல பாடசாலைகள் இருந்தபோதிலும், இப்பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். ரிசாத் மற்றும் நிர்வாகத்தினரின் விடாமுயற்சியினால், பல சிரமங்களை கடந்து இந்த வசதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டமை, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி சூழலை உருவாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்விற்காக ஒத்துழைப்புகளை வழங்கிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும், பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள புதிய கல்வி வசதி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்தியா போபால் கம்பன் கழகத்தின் இரண்டாவது ஆண்டு கம்பன் விழாவாகவும், இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஓர் அங்கமான கம்பன் விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு இரண்டு அமைப்புகளும் இணைந்து மட்டக்களப்பில் பிரமாண்டமாக நடைபெற்ற "கம்பன் விழா - 2026"
இந்நிகழ்வு 29.03.2026 ஞாயிற்றுக் கிழமை கிரான்குளம் சீ மூண் கார்டன் மண்டபத்தில் முழு நாள் நிகழ்வாக "அயோத்தி அரங்கு" மற்றும் "இலங்கேஸ்வரன் அரங்கு" என பெயரிடப்பட்டு சிறப்பாக நடைபெற்றறது.
பட்டிமன்ற நடுவர் கதிரவன் தலைவர் - கதிரவன் த.இன்பராசா ஒழுங்கமைப்பில், போபால் கம்பன் கழகச் செயலாளர் பா.குமாரின் இணைப்பாக்கத்தில் நடைபெற்ற இவ்விழா காலை அமர்வு விருந்தினர்கள் வரவேற்போடு ஆரம்பமாகியது.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்ஜின் நல்லாசியுடன், கதிரவன் கலைக் கழகத் தாபகர் கலாபூசணம் சி.தங்கராசா அவர்களின் முன்னிலையில், புதுக்குடியிருப்பு சிறி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு ஜனார்த்தனன் குருக்கள் ஆசியுரையுடன், போபால் கம்பன் கழகத் தலைவர் முனைவர் கா.பா சௌந்தர்ராஜனின் தலைமையுரையோடு, போபால் கம்பன் கழகச் செயலாளர் பா. குமாரின் தொடக்க உரையோடு கம்பன் விழா அரங்கை அலங்கரித்தது.
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி இரா முரளீஸ்வரன் முதன்மை விருந்தினராகவும், மண்முனைப் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் கி.இளங்குமுதன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் சூ. பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்
புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத் தலைவர் வே. தட்சணாமூர்த்தி, அகில இலங்கை சைவப் புலவர் சங்க உப தலைவர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம், உதவும் கரங்கள் தலைவர் ச. ஜெயராஜா, வவுனியா பல்கலைக்கழக உறுப்பினர் கலாநிதி நாகமுத்து தணிகாசலம்பிள்ளை, உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் ஆலோசகர் சிவசிறி சிவ தர்சக சர்மா குருக்கள், ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்ததோடு கொழும்புத் தமிழ் சங்கத் தலைவர், கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் ஆகியோர் விசேட விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை விருந்தினர்களாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மங்கல விளக்கேற்றலுடன் அன்னை சாரதா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் இறைவணக்கத்தோடு கதிரவன் கீதம் இசைக்கப்பட்டு ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து கதிரவன் கலைக்கழக செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் பு. யுவதாஸ்ஸின் வரவேற்புரையுடன், மட்/மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலா மன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் அரங்கை அலங்கரித்தது.
தொடர்ந்து ஷர்மிலா சுப்ரமணியம் அவர்களின் அரங்க அறிமுகம் இடம்பெற்று சிறப்பான நடன நிகழ்வினை கோபிநாத் அகன்யா அவர்கள் ஆற்றுகை செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய மட்ட கதாப்பிரசங்கப் போட்டியில் வெற்றி பெற்ற இன்பராசா புகழாரணியின் கதா பிரசங்கமும், தனுஷ்கரன் மிர்த்திகாவின் கவிதையும், தனுராஜ் ஆதித்யஸ்ரீயின் பேச்சும் கம்பன் விழாவைச் சிறப்பித்தது.
கம்பன் விழா ஒழுங்கமைப்புத் தலைவர் கதிரவன் த. இன்பராசா ஊர் இருந்து உலகம் வரை என்னும் தலைப்பிலான சிறப்புரையினைத்
தொடர்ந்து ஏழு வயது சிறுமி சுப்பிரமணியம் காவியஸ்ரீ அவர்களுக்கு மனிதக் கணிப்பான் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றதோடு அவரின் மன கணித சிறப்பு நிகழ்வும் இடம் பெற்றது.
அயோத்தி அரங்கின் விசேட நிகழ்வாக சட்டத்தரணி அ. அன்பழகன் குரூஸ் தலைமையில் கம்பன் கவிச்சமர் இடம்பெற்றது. கவிச் சமரில் கவிமகள் ஜெயவதி மற்றும் கவிஞர் ரவி கிருஷ்ணா ஆகியோர் சமரிட்டனர். கம்பராமாயணத்தின் சில பாத்திரங்களை, பாத்திரங்களின் பண்புகளை, பாத்திரங்களுக்கு ஊடாக வெளிப்படுகின்ற சிந்தனைகளை சமகால மனித வாழ்வியலோடு இணைத்து வெளிப்படுத்தும் விதமாக கவிச்சமர் அமைந்தது.
தொடர்ந்து 150 அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வில் பங்கு பற்றிய விருந்தினர்களுக்கான கம்பன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதான விடயமாக போபால் கம்பன் கழகத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு கதிரவன் கலைக் கழகத்தினால் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை. விசேட அம்சமாகும். அந்த வகையில் போபால் கம்பன் கழகத் தலைவர் பா.மா.சௌந்தர்ராஜனுக்கு "கம்பதாசன் " எனும் விருதும், செயலாளர் பா.குமார் அவர்களுக்கு பன்னாட்டுப்பாவலர் எனும் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு,
நர்மதா அகளங்கன் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. அயோத்தி அரங்கின் நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர் ஜீ.எழில்வண்ணன் நிகழ்த்தியிருந்தார்.
அமர்வு இரண்டு இலங்கேஸ்வரன் அரங்காக பெயரிடப்பட்டு பிரம்மாண்டமான நிறைவு விழா பி.ப 3.00 மணிக்கு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் இறைபணிச் செம்மல் த. கைலாயபிள்ளை ஆசியுரை வழங்க, வேல்முருகன் சகோதரர்கள் அண்ணாச்சி சண் சிவபாதசுந்தரம் முன்னிலை வகிக்க, கதிரவன் ஆலோசகர் திரு அ. குலேந்திரராஜா தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது. விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கி. குணநாயகம், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு மூ.சிவானந்தராசா, புதிய நூற்றாண்டு அரிமா கழகத் தலைவர் அரிமா ரணசிங்க லலித்குமார் ஆகியோர் பங்குபற்றினர்.
அத்துடன் சமூக - சமய மட்ட அமைப்புகளின் தலைவர்கள், அரச அதிகாரிகள், கலை இலக்கிய வாதிகள் எனப் பலரும் இவ்வரங்கில் பங்குபற்றினர்
நிகழ்வுகளின் வரிசையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சிவ தட்சுதன் அவர்களின் இறைவணக்கம் இடம் பெற்று கதிரவன் கீதம் இசைக்கப்பட்டு மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலா மன்ற மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
கதிரவன் கலைக் கழகப் பொருளாளர் திரு சி. சுதேஸ்வரன் அவர்களின் வரவேற்புரை மற்றும்
கவிஞர் தங்க யுவன் அவர்களின் இலங்கேஸ்வரன் அரங்க அறிமுகவுரையினை தொடர்ந்து, களுவாஞ்சிகுடி சைவ மகா சபையின் வில்லுப்பாட்டு அரங்கை அலங்கரித்தது. தொடர்ந்து ஸ்ரீ முருகன் நாட்டிய சேத்ரா மாணவிகளின் நடனம் இடம்பெற்று கம்பன் விழாவின் சிறப்புப் பட்டிமன்றம் பட்டிமன்ற நடுவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் கம்பராமாயணத்தில் மேலோங்கி நிற்பது உறவா....? நட்பா....? என்னும் தலைப்பில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 171 வது பட்டிமன்றமாக அரங்கேற்றம் கண்டது.
உறவே.....! எனும் அணியில் மட்டுநகர் சிவ வரதகரன், பாலமீன்மடு இரா கலைவேந்தன் ஆகியோரும் நட்பே......! எனும் அணியில் கவிஞர் அழகுதனு, சோலையூரான் ஆ தனுஷ்கரன் ஆகியோரும் விவாதித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவையோரை சிந்திக்கச் சிரிக்க வைக்க கூடிய வகையில் மிகச் சிறப்பாக அமைந்த பட்டிமன்றத்தில் கம்பராமாயண பாத்திரங்களின் ஊடாக வெளிப்படுகின்ற நட்பு உறவு சம்பந்தப்பட்ட விடயங்களை கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாண்டுள்ள விதம், சமகாலத்தில் மனித வாழ்வியலோடு இதனை எவ்வாறு இணைக்கலாம் என பல்வேறு விடயங்கள் பட்டிமன்றத்திற்கு ஊடாக பகிரப்பட்டது.
பட்டிமன்றத்தினைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கு முகமாக கம்பன் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்குக் நிகழ்வு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் முக்கியத்துவம் பற்றி உணரத் தக்க வகையிலே இடம் பெற்றது.
அத்துடன்1976 ஆம் ஆண்டு கதிரவன் கலைக் கழகம் ஆரம்பித்த காலத்தில் நாடகத் துறையில் செயற்பட்ட ஆரம்பகால அங்கத்தவர்களுக்கான கௌரவம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
கலைஞர்கள் கௌரவத்தினை தொடர்ந்து போபால் கம்பன் கழகம் கதிரவன் கலைக் கழகத் தாபகர் கிராமிய கலைஞர் சி தங்கராசா, கதிரவன் கலைக் கழக ஆலோசகர் திரு அ. குலேந்திரராஜா மற்றும் வேல்முருகன் சகோதரர்கள் சண் சிவபாதசுந்தரம் ஆகியோருக்கு "கம்பன் பணிச்சுடர் " விருதினையும் கதிரவன் கலைக் கழகத் தலைவர் த.இன்பராசா, கதிரவன் கலைக் கழக ஆலோசகர் சட்டத்தரணி அ. அன்பழகன் குரூஸ் ஆகியோருக்கு "கம்பன் தமிழ்ச் சுடர்" விருதினையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் நகைச்சுவைப் பூபாலன் நன்றியுரை வழங்க கதிரவன் கலைக்கழகச் செயலாளர் புதுவையூர் பு தியாகதாஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார்.
கம்பன் விழா சிறப்பாக நடைபெற கதிரவன் கலைக் கழகத்தோடு போபால் கம்பன் கழகம் மற்றும் கதிரவன் உறவுகள், கலை இலக்கிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பேராளர்கள் கைகோர்த்தமை கம்பன் விழாவின் வெற்றிக்கு சான்றாகும் எனக் கருத முடிகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (02 ) பாடசாலை சுகாதார மருத்துவ பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குழுவினரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களும் கலந்து கொண்டு, மாணவர்களின் சுகாதார நிலைகளை விரிவாக மதிப்பீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
மேலும், பாடசாலை சுற்றுச்சூழல் பரிசோதனை மற்றும் சிற்றுண்டி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையின் போது, மாணவர்கள் உட்கொள்ள தகாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனுடன், மாணவர்களின் உடல் நலன் மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, மாணவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்று மாவட்ட ரீதியில் 27ஆம் இடத்தைப் பெற்று வைத்தியத் துறைக்கு தெரிவான மாணவன் அன்பழகன் பிரஜித் அவர்களுக்கு நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவர் அடைந்துள்ள இச்சிறப்பான சாதனை அவரது உறுதியான இலக்கு, அயராத உழைப்பு மற்றும் தளராத தன்னம்பிக்கையின் விளைவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வெற்றி அவரது குடும்பத்தினர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்ற பாடசாலை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய சாதனைகள், எதிர்கால இளம் தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாகவும், கல்வி நோக்கில் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மாணவன் அன்பழகன் பிரஜித் அவர்கள் தனது எதிர்கால உயர்கல்வி மற்றும் சமூகப் பணிகளில் மேலும் பல சாதனைகள் படைத்து உயரங்களைத் தொட வேண்டும் எனவும், அவரது கல்விப் பயணம் தொடர்ந்தும் சிறக்க இறையருள் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாவிதன்வெளி தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவி வந்த இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி புதன்கிழமை இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாம் வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தன்னார்வத்துடன் இரத்த தானம் வழங்கினர். மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பலர் தங்களின் மதிப்புமிக்க இரத்தத்தை தானமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயீஸ், இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ச. மருதராஜன், மேட்ரன், இரத்த வங்கி பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.
இரத்த தான முகாம் மூலம் அவசர சிகிச்சைகளுக்கு தேவையான இரத்த சேமிப்பை அதிகரிக்கும் முயற்சியாக இது அமைந்ததுடன், பொதுமக்களிடையே இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
மேலும், இரத்த தானத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களை பாராட்டும் விதமாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதும் நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்த முயற்சி சமூக ஒற்றுமையையும், மனிதநேயப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் முக்கிய செயலாக அமைந்துள்ளது.
கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வியியல் குழுவினருக்கு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (02) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் உறுப்பினர்கள் பாடசாலைக்கு வருகை தந்து, மாணவர்களின் சாதனைக்கு பின்னால் அயராத முயற்சிகளை மேற்கொண்ட அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.
இதன்போது, அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் அளிக்கப்பட்டன. மேலும், நிகழ்வின் நிறைவாக இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அயராத முயற்சிகளை மேற்கொள்ளும் கல்வியாளர்களை கௌரவிக்கும் இத்தகைய நிகழ்வுகள், கல்வி துறையில் ஊக்கத்தை அதிகரிக்கும் முக்கியமான முயற்சிகளாகக் கருதப்படுகின்றன.
இந்நிகழ்வு பாடசாலை சமூகத்திற்குள் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியதோடு, எதிர்கால கல்வி சாதனைகளுக்கான உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது.
சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு நவீன மின்விளக்கு தொகுதிகள் வழங்கல்
நூருல் ஹுதா உமர்
பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் சம்மாந்துறை கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள் இன்று (02) வழங்கப்பட்டன.
இத்தொகுதிகளை சம்மாந்துறை “வன் என் வன்” டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
யானை தாக்குதலில் இருந்து பாடசாலையை பாதுகாக்கவும் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறந்த கல்வி சூழலில் பயிலும் வகையிலும் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் தொடர்புடைய தரப்பினரும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பாடசாலையில் இந்த நவீன மின்விளக்கு தொகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபை ஊடாக பொருத்தும் நோக்கில் இந்த மின்விளக்கு தொகுதிகள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளாரிடம் கையளிக்கப்பட்டது
இத்தகைய சமூகப் பொறுப்புணர்வு செயல்கள் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என்பதையும், எதிர்காலத்திலும் இதுபோன்ற உதவிகள் தொடர வேண்டும் என்பதையும் கல்வி வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை ட்ரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார். அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்:
ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்.ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம். ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் தேவையில்லை. அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
க.பொ.த.உயர்தர பரீட்சையில் (2025) உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் ரமேஸ் தேத்சித் அவர்களை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஆதம்பாவா , தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்பாளரும் கௌரவ பிரதேச சபை உறுப்பினருமாகிய ரதீசன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்
சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (01) காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வயல்வெளி பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்ததாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் உயிரிழந்தவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த, சுமார் 50 வயதுடைய ஆதம்பாவா றியால் என்பவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், சட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.