சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு விசேடமாக 5 மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர் என பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
விசேடமாக மருத்துவதுறையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெறமுடிந்துள்ளதுடன் வர்த்தக பிரிவிலும் மாவட்ட மட்டத்தில் 3,ஆம் 8ஆம் நிலையினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் மாகாணத்தில் 3 ஆம் இடத்தையும் மாவட்ட அடிப்படையில் 1 ஆம் இடத்தையும் முன்னோக்கி நகர முடிந்துள்ளதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டார்.
அத்தோடு தமது பாடசாலையும் 75 வீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தை பெற்று 73 இற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற்று வலயத்தின் இத்தகைய முன்னேற்றத்துக்கு ஏனைய பாடசாலைகளைப்போல் கணிசமான பங்களிப்பு செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சாதனை தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்டதல்ல. குழு ரீதியான அர்ப்பணிப்பணிப்பின் மூலமே சாதிக்க முடிந்துள்ளது. இதற்காக திட்டமிட்டு உழைத்த வலயக் கல்வி பணிப்பாளர்,பிரதிக் கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக் கல்வி பணிப்பாளர்கள்,உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள்,அனுசரணை யாளர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,பெற்றோர்கள்,மாணவர் கள்,பாடசாலை அபிவிருத்தி குழு பழைய மாணவர் சங்கம் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் பாடசாலை சார்பில் தெரிவித்துகொள்வதாகவும்; குறிப்பிட்டார்.
விசேடமாக மருத்துவதுறையில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெறமுடிந்துள்ளதுடன் வர்த்தக பிரிவிலும் மாவட்ட மட்டத்தில் 3,ஆம் 8ஆம் நிலையினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் மாகாணத்தில் 3 ஆம் இடத்தையும் மாவட்ட அடிப்படையில் 1 ஆம் இடத்தையும் முன்னோக்கி நகர முடிந்துள்ளதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டார்.
அத்தோடு தமது பாடசாலையும் 75 வீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தை பெற்று 73 இற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதியை பெற்று வலயத்தின் இத்தகைய முன்னேற்றத்துக்கு ஏனைய பாடசாலைகளைப்போல் கணிசமான பங்களிப்பு செய்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சாதனை தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்டதல்ல. குழு ரீதியான அர்ப்பணிப்பணிப்பின் மூலமே சாதிக்க முடிந்துள்ளது. இதற்காக திட்டமிட்டு உழைத்த வலயக் கல்வி பணிப்பாளர்,பிரதிக் கல்வி பணிப்பாளர்கள்,கோட்டக் கல்வி பணிப்பாளர்கள்,உதவிக் கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள்,அனுசரணை

Post a Comment
Post a Comment