பல சொல்ல முடியாத துன்பங்களோடு 20 வருடத்திற்கும் மேலாக சிறைகளிலும், சித்திரவதை முகாம்களிலும் தவித்துவரும் எமது குற்றமற்ற உறவுகள் அணியில் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு அரசாங்கம் வழங்கியுள்ள சில வாக்குறுதிகளை அடுத்து எதிர்வரும் 13.12.2015 வரை தற்காலிகமாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த மனித அவலம் தொடர்பாக சுவிஸ் ஈழத்தமிழரவை சுவிஸ் பாராளுமன்றத்திற்கும், ஊடகங்களிற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தது.
அதன்போது சுவிஸ் சோசலிச சனநாயகக் கட்சி பணிகால (wintersession 2015) பாராளுமன்ற அமர்வின் போது இவ்விடயத்தை பேசுபொருளாக்குவதாக உறுதியளித்தது.
