Showing posts with label fire. Show all posts

 


மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்


 (கனகராஜா சரவணன்)



மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று செவ்வாய்க்கிழமை (7) அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றிய தையடுத்து மட்டு மாநகர சபை தீயணைப்பு பிரிவு பொலிஸ் தீயணைப்பு பிரிவுள் இணைந்து  4 மணித்தியாலம் போராட்டத்தின் பின்னர் காலை 9.00 மணிக்கு  பாரிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அங்கு பெரும் பரபரப்பு-


இருந்தபோதும் சென்றல் வீதியில் உள்ள சிறுவர் ஆடை விற்பனை கடை தொகுதி மற்றும் பஸார் வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி திருத்தும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் தங்க ஆபரண கடைகள் உட்பட 5 கடைகள் சேதமேற்பட்டதுடன் இந்த இருவீதிகளும் தற்காலிகமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது



இந்த தீ விபத்து தொடர்பாக மட்டு தலைமையக பொலிசா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


மட்டக்களப்பு, பார் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் திடீரென உணவகம் ஒன்றில்  ஏற்பட்டுள்ளது.


இந்த உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது.


சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், துரிதமாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


இந்தத் தீ விபத்தினால் உணவகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


(சரவணன்)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.