நீர்வழங்கல் சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்





நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு
வருட இறுதியில் வழங்கப்படும் மேலதிகக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ​நேற்று (27) ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வருடத்திற்கான மேலதிகக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தத்த்தை ஆரம்பித்ததாக நீர்வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

நிர்வாகத்தினால் தமக்கு சாதகமான பதிலொன்று கிடைக்கப்பெறவில்லையெனில் வேலை நிறுத்தத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் உபாலி ரத்நாயக்க கூறினார்.