குளவிக்கொட்டு: 10 பேர் பாதிப்பு



(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் ரட்ணகிரி தோட்ட பகுதியில் 27.01.2016 அன்று காலை வேளையில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைத் தோட்டப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவர் மட்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 9 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.