முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, இயற்பெயர் தட்சிணாமூர்த்தி[2][3], பிறப்பு: சூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடகத் துறைக்கான பங்களிப்புகள்
- சிலப்பதிகாரம்
- மணிமகுடம்
- ஒரே ரத்தம்
- பழனியப்பன்
- தூக்கு மேடை
- காகிதப்பூ
- நானே அறிவாளி
- வெள்ளிக்கிழமை
- உதயசூரியன்
- நச்சுக் கோப்பை
இலக்கியப் பங்களிப்புகள்
- குறளோவியம்
- நெஞ்சுக்கு நீதி
- தொல்காப்பிய உரை
- சங்கத் தமிழ்
- பாயும் புலி பண்டாரக வன்னியன்
- ரோமாபுரி பாண்டியன்
- தென்பாண்டி சிங்கம்
- வெள்ளிக்கிழமை
- இனியவை இருபது
- சங்கத் தமிழ்
- பொன்னர் சங்கர்
- திருக்குறள் உரை
- மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
விருதுகளும், பெற்ற சிறப்புகளும்
உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக, 2009ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 9. அக்டோபர் 2009 அன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி. சி. குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர்


Post a Comment
Post a Comment