
(கிசாந்தன்)
மலையகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் பாவனைக்குதவாத கிராமபுற மற்றும் தோட்டபுற பிரதான வீதிகளை நல்லாட்சி அரசாங்கம் இணங்கண்டு சீர்செய்யும் நடவடிக்கைக்கு 728 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக 11.01.2016 அன்று லக்ஷபான மினுவந்தெனிய பகுதியில் புனர்நிர்மாண பெயர்பலகையை சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல திரைநீக்கம் செய்து வைத்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் வேண்டுக்கோளுக்கிணங்க இவ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக பன்முகப்படுத்தப்பட்ட 728 மில்லியன் ரூபாவில் 7 கிராமங்களுக்கான 26 வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தில் அட்டன் இட்டிகேகம, உட பொல்கஸ்வத்த பாதை, மினுவந்தெனிய, கினிகத்தேனை எல்லஉட, நோர்வூட் வெஞ்சர், அம்பகமுவ சிலாலேக்கன, கினிகத்தேனை தாகாம்பிட்டிய போன்ற கிராம மற்றும் தோட்டப்புறங்களுக்கான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
