எம்பிலிபிட்டி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய நடவடிக்கை



எம்பிலிபிட்டி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டியில் அண்மையில் இளைஞர் ஒருவர் மரணமான சம்பவமொன்று தொடர்பில் எம்பிலிபிட்டி பொலிஸ் துணை அத்தியட்சகர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய ஊழியர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருந்துபசாரமொன்றில் பங்கேற்றிருந்த தரப்பிற்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்தார்.
பொலிஸார் மதுபானம் கேட்டதாகவும் அதனை வழங்க மறுத்த காரணத்தினால் இந்த மோதல் வெடித்ததாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் பொலிஸார் அந்த இடத்திற்கு சென்றதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
எவ்வாறெனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு எம்பிலிபிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.