புகையிரதம் முன் பாய்ந்து இராணுவ பொலிஸ் சிப்பாய் தற்கொலை



யாழில் இருந்து கொழும்புக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ பொலிஸ் சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உள்ள 55வது படைப்பிரிவின் கடமையாற்றும் நந்தசூரிய என்ற இராணுவ பொலிஸ் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

யாழ். ஆணையிறவு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் இராணுவ பொலிஸ் சிப்பாயின் தலை சிதறிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான விசாரணையினை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.