
கடந்த சில தினங்களாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது சதொச களஞ்சிய சாலைகளில் மனித பாவனைக்கு உதவாத அரிசி 17068 மெற்றிக்டொன் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த அரிசி தொகையை களஞ்சிய சாலையில் வைத்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள களஞ்சியசாலைகள் தொடர்பாக 011 263 5675 எனும் இலக்கத்துக்கு அறியத்தருமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஏக்கலை சதொச களஞ்சியசாலையில் 500 மேற்றிடோன் அரிசியும், வத்தளை சதொச களஞ்சியசாலையில் 11154 மேற்றிடோன் அரிசியும், கொலன்னாவை சதொச களஞ்சியசாலையில் 240 மேற்றிடோன் அரிசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக சதொச நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
