புதிய ஆண்டின் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்



2016ம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறுகின்றன. 

இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைத்து புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இந்த ஆண்டில் இடம்பெறவுள்ளன. 

புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கையை இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.