சம்பளம் வழங்கக் கோரி வட்டவளை மென்ஜின் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இம்மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, ஹட்டன் – வட்டவளை மென்ஜின் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்பட வேண்டிய சம்பளம் இதுவரை வழங்கப்படாமையால் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
சம்பளம் கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
சுமார் 3 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மென்ஜின் தோட்டத்தின் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.