கடந்த 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற நபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான சிவராஜா ஜெனிவன் என்ற குறித்த நபர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.
ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய பின்னர் அந்த நபர் ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது ஜெனிவனின் கைகளை பிடித்து, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.
பொலன்னறுவை - மன்னம்பிடிய பகுதியில் வைத்து, குறித்த நபர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.