நீதிமன்ற வளாகத்தில் நேற்று முறையற்ற முறையில் நடந்தவர்களைக் கைதுசெய்க



ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முறையற்ற முறையில் நடந்துகொண்டவர்களை உடனடியாக கைதுசெய்யும் படி ஹோமாகம நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஹோமாகம நீதிமன்ற வளாகத்தை சில பிக்குகள் குழப்பம் விளைவித்தனர்.
ஞானசார தேரரை விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை பேரூந்து வருகை தந்திருந்த நிலையில் அதனை வெளிச்செல்ல விடாமல் பௌத்த பிக்குகள் சிலர் அதன் அடியில் சக்கரங்களின் முன்பாக படுத்துக் கொண்டுள்ளனர்.