கிழக்கிலும் வடக்கிலும் 3000 வறிய குடும்பங்களுக்காக யுஎஸ்எயிட் உதவி



கிழக்கிலும் வடக்கிலும் 3000  வறிய குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்காக யுஎஸ்எயிட் வாழ்வாதார உதவி
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 0770439397
கிழக்கிலும் வடக்கிலும் 3000  வறிய குடும்பங்களின் வருமான அதிகரிப்புக்காக யுஎஸ்எயிட் அமைப்பு வாழ்வாதார உதவி புரிந்து வருவதாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதரகம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், உணவு பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும், யுஎஸ்எயிட் அமைப்பு உதவி புரிகின்றது.
இந்த முயற்சி இலங்கை அரசாங்கம், உள்ளுராட்சி மற்றும் தனியார் துறையினருடன் இணைநது; முன்னெடுக்கப்படுகின்றது.
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், யுத்தத்தால் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கான உதவிகளில் முன்னுரிமை வழங்குவதற்கும் விசேட கவனம் எடுக்கப்படுகின்றது,
இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் அவர்களது புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் யூஎஸ.எயிட் உதவி புரிந்து வருகின்றது.