இரண்டு பஸ் நேர்க்கு நேர் மோதி விபத்து




அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் ஸ்டிரதன் பகுதியில் 20.02.2016 அன்று மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லதண்ணியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து நல்லதண்ணி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.

கொழும்பிலிருந்து நல்லதண்ணி நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த  விபத்து  தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.