காத்தான்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு




உலகின் பல நாடுகளில் காதலர்தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், சில நாடுகளில் இதற்கு தடையும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
காத்தான்குடி பகுதியில் காதலர்தின எதிர்ப்பு சுவரொட்டிகள்
அவ்வகையில் இலங்கையின் பல பகுதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்ட சூழலில், கிழக்கு மாகாணம் காத்தான்குடி பகுதியில் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்து சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் "எச்சரிக்கை, கண்காணிக்கப்படுகிறீர்கள்" போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இதில் எச்சரிக்கை என்பது விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், கண்காணிப்படுகிறீர்கள் என்பது இறைவனால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறீர்கள் என்பதே என்று, அந்த எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ள அமைப்பினர் கூறுகின்றனர்.
அன்பு அல்லது காதல் என்பது ஆண்டுக்கு ஒரு தினம் மட்டுமே காட்டப்படவேண்டியதில்லை, அதை ஆண்டு முழுவதும் வெளிப்படுத்தலாம் என எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் என்பது இன்றைய காலகட்டத்தில் பாலியல் ரீதியான உறவையே காட்டுகிறது, அது வியாபாரத் தந்திரம் எனத் தாங்கள் கருதுவதாக இந்த எதிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இப்படியான எதிர்ப்புகள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதையும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு காத்தான்குடியில் எதிர்ப்பானவர்கள் கூறுகிறார்கள்.