மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதியை துவிச்சக்கர வண்டியில் கடக்க முயற்சித்தவர் மீது டிப்பர் வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற காத்தான்குடி இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.எப். ஆதம்லெவ்வை (78) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 48 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தர் குளியாப்பிட்டிய வீதியில் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கால்வாய் ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் இன்று காலை கடமைக்கு செல்லும் வழியில் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். (KKY TIMES)

