சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் பணிநிறுத்தத்தில்



இலங்கை சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் தமது அலுவலக கடமைகளில் இருந்து விலகி பணிநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுங்கத்தின் விசாரணைப் பிரிவுகள் பல இருந்த போதிலும், 4 திணைக்களங்கலுக்கும் மேலாக மற்றொரு விசாரணை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த உடுவல தெரிவித்தார்.
இந்த புதிய பிரிவு தமது தமது கடமைகளை கண்காணிப்பு செய்யும் தரத்திற்கு அமைப்பதாயின் அது தொடர்பாக தமது சங்கத்திற்கு அறிவித்திருக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு அறிவிக்காமல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.