கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கபுர எனும் பகுதியில் உள்ள பாதையிலிருந்து 20 அடி பள்ளத்தில் தவிறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் 21.02.2016 அன்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என கினிகத்தேனை பொலிஸார் சந்தேககிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கினிகத்தேனை - பண்டாரநாயக்கபுர பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதய சிரிவர்தன (வயது – 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் விழுந்து கிடப்பதை கண்ட அப்பகுதி பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது.
இது ஒரு விபத்தா அல்லது கொலையா என கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

