கல்விஅமைச்சருடனான சந்திப்பில் முன்னேற்றம்!
எனினும் ஆசிரியஆலோசகர் சேவை அமுலுக்குவரும்வரை சட்டப்படிவேலைப் போராட்டம் தொடரும்!
அகிலஇலங்கை ஆசிரியஆலோசகர் தொழிற்சங்கம் கூறுகிறது!(காரைதீவு நிருபர்வி.ரி.சகாதேவராஜா )
கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்துடனான சந்திப்பில் திருப்தியான முன்னேற்றம் காணப்பட்டபோதிலும் எமக்கான இலங்கை ஆசிரியர்ஆலோசகர் சேவை அமுலுக்குவரும்வரை எமது சட்டப்படிவேலைப் போராட்டம் நாடுபூராகவும் தொடரும்.
இவ்வாறு அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் தொழிற் சங்கம் கல்விஅமைச்சரைச்சந்தித்தபின்னர் நேற்று வியாழக்கிழமை கொழும்பு இராஜகிரியவில் இடம்பெற்ற உயர்பீடக்கூட்டத்தில் தீர்மானத்தை வெளியிட்டது..
மேற்படி சங்கத்தின் தலைவர் ஆர்.அத்தபத்து தலைமையில் நேற்று இந்த அவசரக்கூட்டம் இடம்பெற்றபோது மாகாண இணைப்பாளர்கள் கலந்துகொண்டு கடந்த ஒருவாரகால போராட்ட நிலைமைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய ஆலோசகர்களின் சட்டப்படி வேலை ஒருவாரகாலத்தையும் தாண்டி வெற்றிகரமாகத் தொடர்ந்துகொண்டிருப்பதை கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.றிஸ்வான் ( ஆசிரியஆலோசகர்-கந்தளாய்வலயம்) தெரிவித்தார்.
நாட்டில் பெரும்பாலான வலயங்களில் வலயமட்ட வெளிவாரி மதிப்பீட்டுக்குழுவின் விஜயங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த இரு வாரகாலமாக பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீடு இடம்பெறவில்லை.
நிரந்தரமான தனியான ஆசிரியஆலோசகர் சேவையை அமுல்படுத்துமாறு கோரியே அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் நாடளாவியரீதியில் இச்சட்டப்படி இச்சட்டப்படி வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி இச் சங்கம் நாடளாவியரீதியில் மாகாணகல்வித்திணைக்கள அலுவலகங்களுக்கு முன் கவனயிர்ப்புப்போராட்டங்களை நடாத்தியது. ஆனால் இன்னும் தீர்வில்லை.அதன்பிறகு கடந்த பெப்ருவரி 1ஆம் தகதியிலிருந்து கிழக்கில் இவ்வேலைப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுவருகின்றனர்.
அமைச்சருடனான சந்திப்பில் நடந்தவை!
அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் தொழிற் சங்கம் புதனன்று கல்வியமைச்சிற்குச்சென்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்துடன் சந்திப்பை மேற்கொண்டது.
சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.அத்தபத்து பொதுச்செயலாளர் பி.பந்துல உள்ளிட்டநான்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஆசிரியஆலோசகர் சேவை அமுல்படுத்தப்படும்வரை எமது போராட்டம் தொடரும் என சங்கத்தூதுக்குழுவினர் கல்வியமைச்சரிடம் கூறினர்.
ஏலவே வடிவமைக்கப்பட்ட ஆசிரியஆலோசகர் சேவைப்பிரமாணக்குறிப்பில் சம்பள நிலைகள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அது இழுபட்டுவந்திருந்தது.
தற்போது அவை பெருமளவில் களையப்பட்டு முழுவடிவத்திற்கு வந்துள்ளது.அதனை அமைச்சரவைக்கு சமர்ப்ப்pத்து அங்கீகாரம் பெற்றபிற்பாடே அமுலுக்குகொண்டுவரமுடியும்.
உத்தேச ஆசிரியஆலோசகர்சேவையை அமுல்படுத்துவதற்கு முன் அச்சேவையை ஸ்தாபிப்பதற்கு தனது அங்கீகாரத்துடன் பத்திரத்தில் ஒப்பமிட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அதனையடுத்து சந்திப்பு நிறைவுற்றது.
நேற்றைய கூட்டம்!
நேற்று வியாழக்கிழமை சங்கத்தின் உயர்பீடக்கூட்டம் இராஜகிரியவில் இடம்பெற்றது.
அமைச்சரின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து அடுத்தவாரம் கல்வியமைச்சின்முன் மேற்கொள்ளப்படவிருந்த உண்ணாவிரதப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் ஆசிரியஆலோசகர்சேவை அமுலூகும்வரை போராட்டத்ததை நாடளாவியரீதியில் தொடருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

