உருக்குலைந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு



(க.கிஷாந்தன்)

ஐந்து அடி நீளமான சிறுத்தையொன்றினை நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  13.02.2016 அன்று பிற்பகல் இறந்த நிலையில் மீட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பகுதியை அண்மித்த தியசிரிகம கிராம பகுதியில் குறித்த பகுதிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து, மேற்படி சிறுத்தை உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 05 வயது நிரம்பிய மேற்படி சிறுத்தையானது  5 அடி உயரத்தை கொண்டதென வன ஜீவ திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்