சூரியவெவ மைதானம் வாடகைக்கு விடப்படுவது இன்று நேற்றல்ல – தயாசிறி



சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை திருமண நிகழ்வுகளுக்காக வாடகைக்கு வழங்குவது இன்று நேற்று அல்ல, கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கேஷா விதானகே எழுப்பி கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சூரியவெவ விளையாட்டு மைதானம், திருமண நிகழ்வுகளுக்காக நாளொன்றுக்கு 10,000 ரூபாவுக்கு வாடகைக்கு விடப்படுகின்ற நடவடிக்கை தற்போதைய அரசாங்கத்தால் அல்ல எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் 5000 -10,000 ரூபாவுக்கு குறித்த மைதானம் வாடகைக்கு விடப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.