(க.கிஷாந்தன்)
தலாவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்ட பகுதியில் உள்ள காடு 19.02.2016 அன்று தீடிரென தீபற்றியதால் சுமார் 15 ஏக்கர் காடு தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இச்சம்பவம் 19.02.2016 அன்று மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக காடுகள் இனந் தெரியாதவர்களால் தீ மூட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
மேலும் மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக காடுகளை எரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாய நிலை தோன்றியுள்ளது.
அத்தோடு வனப்பகுதிகளில் இருக்கின்ற உயிரினங்கள் உயிரிழந்துள்ளதோடு ஏனைய உயிரினங்கள் இடம்பெயர்ந்து தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவதோடு வனப்பகுதிகளில் உள்ள ஊற்றுநீர் வற்றுவதோடு வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் கருக்கிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த காட்டுப்பகுதிகளை அண்மித்துள்ள தேயிலை மலைகளும் தீப்பற்றுவதால் தோட்ட தொழிலாளர்களுடைய தொழிலுக்கு ஆபாத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவ்வாறான விடயங்களில் ஈடுப்படும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பபோவதாக வன திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

